தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு – அமைச்சர்

0
8
minister news

திருச்சி: பள்ளி மாணவர்கள் வருகை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணித்து செப்.,15க்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும். அதன் பின் துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்,” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். பா.ஜ.க., உட்பட அனைத்துக் கட்சிகளும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளன.

நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை செப்.15-ம் தேதிக்குப் பிறகு முதல்வரிடம் அளிப்போம். அதனடிப்படையில், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது. புத்தாக்கப் பயிற்சி சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here