பாஜக போல் காங்கிரஸுக்கு ஆட்களை மாற்ற தைரியம் இருக்கிறதா?

0
7
bjp - congress

மக்களிடம் செல்வாக்கு இல்லாத முதல்வர் தலைமையில் தேர்தலை சந்திப்பதைவிட, புதிய முதல்வர் தலைமையில் தேர்தலை சந்திப்பது பலன் தரும் என, பா.ஜ., தலைமை நம்புகிறது.

முதல்வர்களை மாற்றும் பா.ஜ., தலைமையின் முடிவை எதிர்த்து எந்த மாநிலத்திலும் சிறு போராட்டம் கூட நடக்கவில்லை.பதவியிழந்த முதல்வர்களும், கட்சி தலைமையை விமர்சித்து ஒரு வார்த்தை பேசவில்லை. தலைமையின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டுள்ளனர்.

இதற்கு நேர் எதிராக காங்கிரஸ் தலைமையின் செயல்பாடு உள்ளது. விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அம்ரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என 32எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும், ராகுலும் இந்த விவகாரத்தில் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

சத்தீஸ்கரில் 2018ல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக பாகேலும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக சிங் தியோவும்இருப்பர் என, ராகுல் உறுதியளித்தார்.இரண்டரை ஆண்டு முடிந்த நிலையில் முதல்வர்பதவியில் இருந்து விலக பாகேலுக்கு மனமில்லை.

விட்டுக் கொடுக்க சிங் தியோவும் தயாராக இல்லை. காங்கிரஸ் தலைமையோ எந்த முடிவும் எடுக்காமல், மவுனம் காத்து வருகிறது.ராஜஸ்தானிலும் முதல்வர் கெலாட் – சச்சின் பைலட் இடையே தொடரும் மோதலுக்கு காங்., தலைமை இன்னும் உறுதியான தீர்வு காணவில்லை.

இந்த பிரச்னை விரைவில் எரிமலையாக வெடிக்கும் அபாயம் உள்ளது.அசாம், புதுச்சேரி மாநிலங்களிலும் இது போன்ற பிரச்னையால் தான், சட்டசபை தேர்தல்களில் காங்கிரசால் வெற்றி பெற முடியவில்லை.

பா.ஜ.,வை போல் காங்கிரசுக்கு வலிமையான தலைமை இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் எந்த மாநிலத்திலும் காங்., ஆட்சி இல்லை என்ற நிலைமை ஏற்பட்டால் ஆச்சர்யமில்லை என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியதாவது:காங்கிரசில், சோனியா தலைமையில் சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன. கட்சி தலைமையை விமர்சித்து கடிதம் எழுதிய தலைவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர்.தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்க வேண்டும். அவரை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், கட்சியில் சீர்த்திருத்தம் செய்வதை எதிர்க்கின்றனர் என்றே கருத முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here