’’தேர்தலுக்கு முன்பே தலைவி திரைப்படம் வெளிவந்திருந்தால் அதிமுக ஆட்சியே மீண்டும் வந்திருக்கும்’’ என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்

0
15
admk news

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’தலைவி’ என்கிற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதனை அதிமுகவினர் உள்பட பலர் பார்த்து வருகிறார்கள். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஏற்பாட்டின் பேரில் அதிமுக தொண்டர்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். அதிமுக வரலாற்றை சினிமா வடிவில் பார்க்கும் அதிமுகவினர் பழைய நினைவுகளை மனதில் ஓடவிட்டு கலந்துரையாடல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி, பாலிவுட் திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் மற்றும் சமுத்திரகனி தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தூத்துக்குடி கேஎஸ்பிஎஸ் கணபதி திரையரங்கத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ரசிகர்கள் சிறப்பு காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் டேக் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார்,மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, ஒன்றிய கழகச் செயலாளர் திருச்செந்தூர் இராமச்சந்திரன்,

தூத்துக்குடி மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் கிங்ஸ்லி ஸ்டார்லிங், ஆத்தூர் சோமசுந்தரம், மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், நிர்வாகிகள் சத்யா லட்சுமணன், வக்கீல் முனியசாமி, வலசை வெயிலுமுத்து, மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் அன்புராஜ், போல்டன்புரம் வட்டச் செயலாளர் அருண் ராஜா,

இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், சுடலைமணி, மனுவேல் ராஜ், ரமேஷ் கிருஷ்ணன், பிசி மணி, கேடிசி ஆறுமுகம், பிஜேபி சுரேஷ், சிறுபான்மை பிரிவு அசன், இம்ரான், ஏகே மைதீன், இலக்கிய அணி ஜான்சன் தேவராஜ், பண்டாரவிளை பாஸ்கர், வெங்கடேஷ், பொன்னம்பலம், சிவலிங்கம், கிஷோர் குமார், இளைஞர் பாசறை சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, ஜெயராம் ஜான்சன், ஆழ்வை சந்திரா, ஜூலியட், முத்துமதி, இந்திரா, ஷாலினி, ஸ்மைலா, ராஜேஸ்வரி, சண்முகத்தாய், அன்னத்தாய், பத்மா, விஜயா, மல்லிகா, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சகாய ராஜா, சங்கரநாராயணன், சொக்கலிங்கம்,

பகுதி அவைத் தலைவர் நடராஜன், எம்ஜிஆர் வீடி தங்கம், வட்டக் கழக செயலாளர்கள் பழனிசாமி பாண்டியன், விஜய், கலைத்தென்றல் முத்து, மணிகண்டன், வட்டக் கழக செயலாளர்கள் பழனிசாமி பாண்டியன், மகாராஜன், முனியசாமிநாடார், ராமச்சந்திரன், சங்கர், சக்திவேல், கொம்பையா, அருண் ஜெயக்குமார், நிக்கோலஸ், ஜெகதீஸ்வரன், கமலக்கண்ணன், அசோகன், ஈஸ்வரன், உலகநாத பெருமாள், ரவீந்திரன், கமலஹாசன், பூரணச்சந்திரன், கண்ணையா, மாரிமுத்து, புதிய முத்தூர் ரவி, அணியபரணல்லூர் ராஜா, குலையன்கரிசல் சரவணவேல்,

கூட்டாம்புளி வேல் சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் செல்லப்பா, சந்திரா செல்லப்பா, பெரியசாமி, சாந்தி, மெஜூலா, உமா கண்ணன், உட்பட பெருந்திரளான அதிமுக நிர்வாகிகள், ரசிகர்கள், மகளிர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு திரைக்காவியத்தை கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த ஆண்களும் பெண்களும் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டனர். ‘இந்த மட்டும் சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பே வெளியாகியிருந்தால், நிச்சயமாக அதிமுக வெற்றி பெற்றிருக்கும். அதிமுக ஆட்சிதான் மீண்டும் வந்திருக்கும்’’ என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று அரசியல் ரீதியான உணர்ச்சியை இந்த படம் அதிகப்படுத்துகிறது என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here