தமிழகத்தில் வளர்வதற்காக போட்டி : முயற்சி எடுக்கும் பாஜக, தடுக்கும் திமுக

0
19
tmb news

அரசியல் கட்சிகள் தனக்கென்று நிலையான ஓட்டு வங்கியை வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது சஜகம். அந்த வகையில் பாஜகவும் தமிழகத்தில் தனக்கென்று ஓட்டு வங்கியை உருவாக்க முயர்ச்சி செய்து வருகிறது. இந்துத்துவா சித்தாந்தத்தை ஏற்பவர்கள் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று பொதுவாக பேசப்பட்டு வந்தாலும், அதே இந்துக்கள்தானே இந்து மதத்தை விமர்சனம் செய்ய கூடியவர்களையும் ஆதரிக்கிறார்கள்.

எனவே தனது ஆதரவாளர்களை குறிப்பிட்ட குழுவாக கோடிட்டு காட்டும் முயற்சியில் பாஜக தயாராகி வருகிறது என்கிறார்கள். இந்துத்துவா சித்தாந்தத்தை ஏற்பவர்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்றிருந்தால், தேர்தல் நேரத்தில் அவர்களிடம் ஏதேதோ சொல்லி மற்றவர்கள் அவர்களை இழுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்கள் மிகவும் கெட்டி காரர்களாக இருக்கிறார்கள். எனவே பாஜக சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களை வளையத்துக்குள் வைத்துக் கொள்வது பாஜகவின் கடமையாக இருக்கிறது.

சமுதாய ரீதியில் பார்த்தால் பட்டியலினத்தவர், கவுண்டர், தேவர்,வன்னியர்,பிள்ளைமார், நாடார் உள்ளிட்ட பல சமுதாயத்தினர் பாஜகவை ஆதரிக்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் பாஜகவை நிச்சயமாக ஆதரிப்பவர்களை தக்க வைக்கவும், அங்கும் இங்குமாக இரட்டை நிலையில் இருப்பவரை ஒரே இடத்தில் நிலை நிறுத்துவதும் பாஜகவின் பொறுப்பாக இருக்கிறது.

பெரும்பாலும் இந்துத்துவா ஆதரவு நிலை கொண்ட பிள்ளைமார் சமுதாயத்தை தக்க வைக்கும் பொருட்டும் தீவிர ஆதரவாளர்கள் என ஆக்கும் பொருட்டும் வ.உ.சியின் தியாகத்தை போற்றும் நடவடிக்கையில் பாஜக தீவிரமாக இறங்கியிருக்கிறது.இதை புரிந்து கொண்ட திமுக, வ.உ.சி சம்மந்தப்பட்ட 14 வகையான அறிவிப்புகளை வெளியிட்டு பிள்ளைமார் ஓட்டுக்களை பாஜக பக்கம் போகவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல் நாடார் சமுதாயத்தில் பலர் கிறிஸ்தவ மதத்தில் இருப்பதால், அவர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை கொடுத்து நாடார் சமுதாய மக்களை முழுமையாக பாஜக பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாஜக. அந்த வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் வைத்து நடத்தப்பட்ட தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கி நூற்றாண்டு தொடக்க விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.

அதில் நாடார் சமுதாய மக்கள் தர்மப்படி வியாபாரம் செய்யும் மரபு கொண்டவர்கள் என்கிற அர்த்ததில் நாடார் சமுதாய மக்களை புகழந்து பேசினார். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால் நாடார் சமுதாய மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறது பா.ஜ.க. ஆனாலும் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட கூடாது என்று விழிப்போடு செயல்பட்டு வருகிறது திமுக உள்ளிட்ட சில திராவிட கட்சிகள். இதில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது அடுத்து நடைபெறும் தேர்தல்களுக்கு பின்னரே தெரியவரும்.

இது குறித்து பாஜகவினர் சிலர், தமிழகத்தில் பாஜக சார்பில் பெரிய அளவில் நிகழ்ச்சி நடத்தினாலோ, மத்திய அமைச்சர்கள் அல்லது பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்திற்கு வந்தாலோ அன்று பரபரப்பாக பேசக் கூடிய வேறு நிகழ்ச்சியோ, சம்பவமோ இங்கு நடந்துவிடுகிறது. அதன் மூலம் பாஜகவின் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் பேசப்படாமல் போகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போகிற இடங்களில் கல்லூரி மாணவர்களிடம் பேச வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடும் நடந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. கல்லூரி நிர்வாகங்களை தொடர்பு கொண்டு துறை அமைச்சரே பேசியதால் கல்லூரி நிர்வாகங்கள் கடைசியில் மறுத்துவிட்டன. இதெல்லாம் பாஜகவை வளரவிடாமல் தடுக்கும் சதி என்றுதான் நாங்கள் கருதுகிறோம். மத்தியரசு சம்மந்தபட்டது எதாவது அறிவிப்பு வரும்போது அதை மறைக்கும் வகையில் தமிழகத்தில் எதாவது நடத்தப்படுகிறது என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்கள் எத்தனை தடுப்புகளை கொண்டு தடுத்தாலும் அடுத்து வரும் தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜக பெரிய அளவில் வளர்ந்தே ஆகும்’’ என்கிறார்கள் நம்பிக்கையாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here