காந்தகாரில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்

0
7
world news

காந்தகார்: காந்தகாரில் உள்ள காலனியில் வசிப்பவர்களை வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

காந்தகாரின் தெற்கு பகுதியில் உள்ள பகுதியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் அவர்களை 3 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்தகார் கவர்னர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களில் பலர் சாலையை மறித்து போராட்டம் நடத்தியதாக அந்நாட்டு மீடியாக்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க தலிபான்கள் மறுத்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here