அதிமுக, திமுக சார்பில் போட்டிபோட்டு அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

0
97
anna newes

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் சிக்னல் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், நிர்மலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காய்கறி மார்க்கெட் சிக்னல் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், மீனவர் நலன், மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேவேளை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட இணை செயலாளர் செரினாபாக்கியராஜ், முன்னாள் எம்.பி நட்டர்ஜி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீரபாகு, துணை செயலாளர் வலசைவெயிலுமுத்து, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலளார் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சுதர்சன்ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன்துரைமணி, மாவட்ட துணை செயலாளர் வசந்தாமணி, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டி, ஜவகர், அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகன்டன், வட்ட செயலாளர் மனுவேல்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லப்பா, சந்திரா, பெரியசாமி மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, பகுதி செயலாளர்கள் சேவியர், ராமகிருஷ்ணன், முருகன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், அருள்தாஸ், டேவிட்ஏசுவடியான், சகாயராஜ், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here