ஒரே நேரத்தில் 800 கி.மீ தூரம் ஓட்டும் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் – ஆட்கள் பற்றாக்குறையால் நடக்கும் அவலம்

0
96
tntc news
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

போதிய அளவில் ஓட்டுனர், நடத்துனர் இல்லாததினால் ஒரே ஓட்டுனர் தொடர்ந்து 18 மணி நேரம்,800 கி.மீ தூரம் பேருந்தை ஓட்டும் அவல நிலை அரசு போகுவரத்து கழகத்தில் இருந்து வருகிறது. தேவையான ஆட்களை தேர்வு செய்து விபத்துக்களை தவிர்க்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

மாவட்த்திற்குள்ளும், மாவட்டங்களை தாண்டி தமிழகம் முழுவதிலும், அதையும் தாண்டி மாநிலங்களிடையேயும் போக்கு வரத்து தேவைகளை நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு போக்குவரத்து கழகம். தமிழகம் முழுவதிலும் சுமார் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் புதிய பேருந்துகளை புதிய வழித்தடங்களில் இயக்குவது சம்பந்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துதுறை அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் ஆலோசித்து வருகிறார்.

இதற்கிடையே தற்போது இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஓட்டுனர், நடத்துனர் மற்றும் ஊழியர்கள் போதிய அளவில் இல்லை என்கிற குறை சொல்லப்படுகிறது. அதிலும் எழுதபடாத சட்டமாக ஓ.டி (அதர் டியூட்டி)என்கிற பெயரில் ஆளும் கட்சி தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுனர், நடத்துனர் மற்றும் ஊழியர்கள் நேரடியாக பேருந்துகளை இயக்காமல் வேறு டியூட்டிக்கு சென்றுவிடுகிறார்கள். அதில் சிலர் அமைச்சர் அல்லது எம்.எல்.ஏக்களுக்கு உதவுகிற வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். அதனால் அத்தனை பேருந்துகளையும், அத்தனை ஆட்களுடன் இயக்குவது முடியாத காரியமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்கள் போக இருக்கிறவர்கள் போதிய அளவில் இல்லை. இருப்பவர்களை வைத்து அதிகாரிகள், பிரச்னை வெளியில் தெரியாமல் ஓட்டுகிறார்கள்.

அதனால் தொலை தூர பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர், நடத்துனர்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். 350 லிருந்து 400 கி.மீ. வரை இயக்க கூடிய ஓட்டுனர்கள், தொடர்ந்து 800 முதல் 900 கி.மீ வரை தொடர்ந்து பேருந்தை இயக்கும் நிலை இருக்கிறதாம். இந்தநிலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் என்று முதல்வர் சொல்லிவிட்டார். ஆனால் அதை இயக்க போதிய ஆட்கள் இல்லை.

அதனால் பேருந்துகள் குறிப்பிட்ட நகரங்களில் இருந்து புறப்பட்டு அடுத்த நகரங்களுக்கு சென்று மறுமார்க்கத்தில் அங்கிருந்து உடனே புறப்பட்டு மீண்டும் புறப்பட்ட நகரத்திற்கே வந்திடும் வகையில் இயக்கப்படுகிறது என்கிறார்கள். அப்படித்தான் தூத்துக்குடியிலிந்து சேலம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி புறநகர் பணிமனையில் இருந்து தினந்தோறும் சேலத்திற்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பகல் 11.25மணிக்கு புறப்பட்டு எட்டயபுரம், அருப்புக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக சேலத்திற்கு இரவு 8.30 மணி அளவில் போய் சேருகிறது. இந்த பஸ் மீண்டும் சேலத்தில் இருந்து இரவு 10.00 – 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 லிருந்து 6 மணீக்குள் தூத்துக்கு புதிய பஸ் நிலையம் வந்து சேருகிறது.

இந்நிலையில், இந்த பேருந்து தினமும் 20மணி நேரம் வரை இயக்கத்தில் உள்ளதோடு இந்த பேருந்தை ஒரு டிரைவரே தொடர்ந்து சுமார் 800கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் ஓய்வின்றி இயக்கும் நிலை உள்ளது. அதாவது தூத்துக்குடியில் இருந்து பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவரே சேலத்தில் இருந்து சிறிது நேர இடைவெளியில் மீண்டும் அந்த பேருந்தை தூத்துக்குடிக்கு இயக்கி வரவேண்டிய நிலை தொடர்கிறது.

சுமார் 20மணி நேரத்திற்கும் மேலாக ஓய்வின்றி ஒரே டிரைவர் நீண்ட தூரம் செல்லும் பேருந்தை இயக்கி வரும் நிலையில் ஏதாவது விபத்துக்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திடும் அபாய நிலையும் உள்ளது. இதனால் இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையே நீண்ட தூரம் இயக்கப்படும் இந்த பேருந்தை சேலத்தில் இருந்து மாற்று டிரைவர் கொண்டு இயக்கவேண்டும், அல்லது பேருந்தில் இங்கிருந்து ஒரு டிரைவர் கூடுதலாக சென்று சேலத்தில் இருந்து மீண்டும் தூத்துக்குடி வரும் போது அந்த மாற்று டிரைவர் இயக்கவேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பணிமனை நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த கோரிக்கையின் பலனாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பஸ்சை இரண்டு டிரைவர்கள் இயக்கும் வகையில் பணிமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சில நாட்களில் இரண்டு டிரைவர்கள் என்ற நிலை நடைமுறையில் இருந்து எடுக்கப்பட்டு மீண்டும் ஒரே டிரைவரே இந்த நீண்டதூர பஸ்சை இயக்கி வருகிறார்.

இங்கு மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலுள்ள பணிமனைகளிலும் நீண்ட தூர பஸ்கள் இதே வகையில் தான் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், ஓய்வின்றி நீண்ட தூர பஸ்களை இயக்கும் டிரைவர்கள் ஓய்வு எடுக்க வழியின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு, இந்த பஸ்சில் பயணிக்கும் பயணிகளும் அச்சத்துடனே பயணிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை தவிர்த்திட அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் தொலைதூர மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை மாற்று டிரைவர்கள் மூலமாக இயக்கிடவேண்டும் என்று பயணிகளும், சமூகஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்துதுறையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தமிழக அரசும் போக்குவரத்துதுறையும் தேவையான ஆட்களை தேர்வு செய்து பயணிகளின் பயணத்தை இனிதாக்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here