கடவுளை புண்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ

0
76
news

புதுடில்லி: ஹிந்து கடவுள்களை ராகுல், காங்கிரஸ் கட்சியும் புண்படுத்துவதாகவும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மகிளா காங்கிரசின் நிறுவன தினத்தையொட்டி நேற்று (செப்., 15) நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‛காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்கள் ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.,வின் சித்தாந்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த இரண்டில் ஒன்று மட்டுமே நாட்டை ஆள முடியும். ஆர்.எஸ்.எஸ்., – -பா.ஜ.,வினர் தான் போலி ஹிந்துக்கள். ஹிந்து மதத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மத தரகர்கள். ஆனால் அவர்கள் ஹிந்துக்கள் அல்ல,’ எனப் பேசியிருந்தார்.

ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடவுளை அரசியலுக்குள் இழுத்து, ஹிந்துக் கடவுள்கள் குறித்து ராகுல் முறையற்ற வார்த்தைகளைப் பேசியது தவறானது. ராகுல் மத அரசியல் செய்கிறார். ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராகுல் பேசி வருவதைக் கவனித்து வருகிறோம். ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளாக கடவுள்கள் லட்சுமியும், துர்க்கையும் சரஸ்வதியும் உள்ளனர். இதுபோன்ற வார்த்தைகளை ராகுல் பயன்படுத்தியிருக்கக் கூடாது.

ராகுலும், காங்கிரஸ் கட்சியும் ஏன் ஹிந்து மதத்தின் மீது விரோதமாக இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. கடவுள் ராமர் மீதும் இதேபோன்ற காங்., கட்சி நம்பிக்கையில்லாமல் இருக்கிறது. ஹிந்து பயங்கரவாதம் என்ற வார்த்தையை இதே காங்கிரஸ் கட்சிதான் பேசியது. நாங்கள் மதத்துக்கான இடைத்தரகர்கள் அல்ல. அனைவருக்குமான வளர்ச்சி, முழுமையான வளர்ச்சியில் நம்பிக்கை கொள்கிறோம். இதுபோன்ற புண்படுத்தும் அரசியலில் ராகுலும், காங்கிரஸ் கட்சியும் ஈடுபடக் கூடாது. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here