காஷ்மீர் செல்கிறார் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

0
80
r.ss

புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் 3 நாள் பயணமாக அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் அக்., 1 முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., மோகன் பகவத் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்தபோது ஜம்மு காஷ்மீருக்கு மோகன் பகவத் சென்றிருந்தார். அதன்பின இப்போது செல்லும் மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், கல்வியாளர்கள் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் இருந்ததால் மோகன் பகவத் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லவில்லை. மற்றவகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாகச்செல்லும் பயணம்தான் என்று ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோகன் பகவத் பயணம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் காஷ்மீர் செல்வது இயல்பானது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த இடத்துக்கும் நேரடியாகச் செல்லவில்லை, நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை.

இப்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ஜம்மு காஷ்மீருக்கு நேரடியாக மோகன் பகவத் சென்று நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீரின் நிலை, முன்னேற்றச் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here