’’தேர்தலில் கழகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை’’ – செயல்வீரர் கூட்டத்தில் அனிதா அதிரடி

0
134
nazareth anitharathdahkrishanan

நாசரேத்,பிப்.02:வருகிற பேரூராட்சித் தேர்தலில் கழகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கட்சி ஒழுங்குநடவடிக்கை எடுக்க தலைமைக்கு பரிந்துரைசெய்யப்பட்டு உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என நாசரேத் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட் டத்தில் தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுகசெயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசினார்.

நாசரேத் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் நாசரேத் பேரூந்து நிலையம் அருகிலுள்ள ஜேஸ்மின் மகாலில் வைத்து நடைபெற்றது.நகரஅவைத்தலைவர் ஜெ. அருள்ராஜ் தலைமை தாங்கினார்.ஆழ்வார்திருநகரி ஒன்றிய கழக செயலாளர் நவீன் குமார்,ஒன்றிய கழக அவைத்தலைவர் பா.சவுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.நாசரேத் பேரூர் கழக செயலாளர் அ.ரவி செல்வக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

’’நாசரேத் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் மதசார்பற்ற ஜனநாயக கூட்ணி வேட்பாளர்கள் போடடியிடுவர். யார், யாருக்கு எந்த வார்டுகள் என பிரித்து கொடுக்கப்பட்டு கூட்டணிகட்சியினரும் வெற்றிபெற வேண்டும் என தேர்தல் பணியாற்ற வேண்டும். பொது தொகுதியில் ஆண்கள்தான் கட்டாயம் போட்டியிட வேண்டும்,பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தொகுதியில் பெண்கள்தான் போட்டியிட அனுமதிக்கப்படுவர்.பொதுதொகுதியில் பெண்கள் போட்டியிட அனுமதிக் கப்பட மாட்டார்கள்.18 வார்டுகளிலும் தகுதியான வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு போட்டியிட அனுமதிக்கப்படுவர்.

வேட்பாளர்கள்அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சின் னங்கள் வழங்கியபிறகு அவர்களை எதிர்த்து கழகபிரமுகர்கள் யாரேனும் எதிர்த்து போட்டியிட்டால் கட்சிகட்டுப்பாட்டை மீறியவர்கள் என்று கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை உடனே எடுக்கப் படும்.கட்சியின் முழு கட்டுப்பாட்டோடு தேர்தல் நடக்கும்.உதயசூரியன் சின்னம்தான் அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

உதயசூரியன் சின்னம்தான் பேரூ ராட்சித் தலைவர் என்று முழுமூச்சோடு தேர்தல் பணியாற்றி வெற்றிபெற வேண்டும். 18-வார்டுகளிலும் கழகத்தினர் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். ஒற்றுமையை சீர் குழைக்கிற வகையில் யாரேனும்நடந்தால் கட்சியைவிட்டே நீக்கப்படுவர். பேரூராட்சி யிலுள்ள 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி கட்சிகளும் வெற்றிபெற வேண்டும் என அனைவரும் உழைக்க வேண்டும்’’ என்றார் அனிதா.

நாசரேத் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.அருணாச்சலம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுப்பிரமணியன்,பெருங்குளம் சுந்தர்ராஜ்,ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர்,வழக்கறிஞர் கிருபாகரன், கபடி கந்தன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஏ.அருண் சாமுவேல்,திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜமீன்சாலமோன்,மாவட்டபிரதிநிதிகள் க.அன்புதங்கபாண்டி,ஜெ.சாமுவேல், ஒன்றியபிரதிநிதிகள் ஏ.காந்தி,பா.தாமரைசெல்வன்,பா.ஜேம்ஸ், முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் ஜோதி டேவிட்,சா.மாமல்லன்,ஒன்றிய அணிநிர்வாகிகள் எஸ்.சரஸ்வதி, இந்திராணி,ஏசுதுரை,ஜெ.யேகோவாகான்,ஆர்.ஜோஸ்வா, ஜெ.ஜுலியட்,

வார்டு செயலா ளர்கள் சி.உடையார்,பி.மாற்கு,என்.கருத்தையா,எஸ்.ஜாண்ஞானதாஸ், ஆர்.சிலாக்கிய மணி, ஏ.ராபின்சன்,ஏ.சிமியோன், ஞா.அப்பாத்துரை,என்.அதிசயமணி,ராஜேந்திரன், மூக் குப்பீறி ஊராட்சி கழகசெயலாளர் கலையரசு,மூக்குப்பீறி ஊராட்சி மன்றத் தலைவர் கமலா, நகர அணி நிர்வாகிகள் காட்சன், கஸ்தூரிபாய், விஜயகுமார், தேவதாஸ், மாணிக்கராஜ்,ஞானராஜ், அழகேசன், மாரிமுத்து, அருளானந்தம், ஜோசப், லெட்சுமி, ஜேம்ஸ்ரவி, இந்திரா, நாகம்மாள், தோனி, ஆல்வின், மற்றும் அகிலன், ஆபிரகாம் ராதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் நாசரேத்நகர திமுக பொருளாளர் ச.சுடலைமுத்து நன்றி கூறினார்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அமோக இடங்களில் வெற்றி பெற உழைத்த கழகத் தலைவர் தளபதியார் அவர்களையும்,தூத்துக்குடி தெற்குமாவட்ட பகுதிகளில் அதிக இடங்களில் வெற்றிபெற காரணமாக உழைத்த மாவட்டச் செயலாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் வெற்றிக்காக உழைத்த கழகத்தோழர்களை பாராட்டுவது, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது, நாசரேத் பேரூராட்சிப்பகுதி களில் தற்போது போடப்பட்டு வரும் தார்சாலை அமைக்கும் பணிகள் தரம் குறை வாக போடப்பட்டு வருகிறது.

அதை தரமாக போட வேண்டும் எனவும், அனைத்துப் பகுதிகளிலும் நல்ல குடிதண்ணீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் எனவும், நாசரேத் கூட்டுறவு நூற்பாலை இருந்த பகுதியில் புதிய தொழிற் பேட்டை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here