சட்டத்தை மீறி சர்ச்சுக்குள் மததேர்தல், திருவிருந்து – தடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு

0
554
csi news

கொரோனா ஊரடங்கிற்கு நடுவே சி.எஸ்.ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் நடத்துவதற்கு அதே சபையை சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகள் மூலம் தடுத்து பார்த்தார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் தேர்தல் பணிகள் நடைபெற்றன.

வரும் 18ம் தேதி விடுபட்டதற்கு மறுதேர்தலும் அதனைத் தொடர்ந்து திருவிருந்து நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இவைகள் சில சர்ச்சுக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதுதான் இப்போது சிலரை கேள்வி கேட்க வைத்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிற காலம்தே என்றாலும், ஆன்மிக ரீதியான வழிபாடு மற்றும் அது சார்ந்த விசயத்திற்கு இன்னும் சில கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் எந்த மத வழிப்பாட்டு ஸ்தலங்களும் இயங்க கூடாது என்கிற விதிமுறைகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது சனிக்கிழை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருப்பது விதிமீறல் என்கிறார் சமூக சேவகியும், அதே கிறிஸ்தவ சபையை சேர்ந்தவருமான எமி.

அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், ’’சி.எஸ்.ஐ – தூத்துக்குடி -நாசரேத் டயோஸிசன் நிர்வாகத்தினர் தொடர்ந்து அரசாணை எண் 504 ஐ மீறி வருவது தாங்கள் அறிந்ததே. கலெக்டராகிய நீங்கள் கடும் நடவடிக்கை எடுத்து தடுப்பதில்லை என்பது வேதனைக்குரியது.

என்னிடம் சி.எஸ்.ஐ – டி.என்.டி நிர்வாகத்தினர், கலெக்டருக்கு கொடுத்துள்ளோம் உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது என்று சவால் விட்டது குறிப்பிடதக்கது. 18.9.202 சனிக்கிழமை சர்ச்ச்களில் ஜெபம் (ம) திருவிருந்து ஆராதனை நடத்துவது மேலும் மத தேர்தல் நடத்தி அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது என்று அனைத்து சர்ச்சிகளிலும் அறிவிப்பு மற்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை இணைத்துள்ளேன்.

1) கோவில்பட்டி பரிபவுலின் ஆலையம், 2) தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம், 3) சாயர்புரம் தூய திருத்துவ ஆலயம், 4) உடன்குடி கிறிஸ்றியாள் நகரம் பரி மாற்கு ஆலயம், 5) முதலூர் தூய மிகாவேல் ஆலயம், நாசரேத் பிள்ளையன்மனை மர்காஷிஸ் கல்லூரி சர்ச்(ம) கல்லூரி அரங்கம் முழு ஊரடங்கான 18.09.2021 சனிக்கிழமை அன்று மத தேர்தல் நடைபெற உள்ள சர்ச்சுகள் மற்றும் அது சார்ந்த இடங்களாகும். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு முன்னாள் குறிப்பிட்ட அந்த பகுதிகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத தேர்தலுக்காக பள்ளிகள், கல்லூரிகளை பயன்படுத்துவது சட்ட விரோதம் என்பது தாங்கள் அறிந்ததே. தாங்கள் தனிபட்ட நபர்கள், இந்துக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தடுக்கிறீர்கள். சி.எஸ்.ஐ – தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகத்தின் மீது அதே கடுமையை காட்ட மறுக்கிறீர்கள். தற்போது தங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, அரசாணை 504 அமல்படுத்த வேண்டும்’’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here