நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு!

0
94
nazareth

நாசரேத்,பிப்.02:நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அனைத்து அணிகள் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு உரை பற்றிய நிகழ்வு கல்லூரிக் கலைய ரங்கில் நடைபெற்றது. திட்ட அலுவலர் முனைவர். சாமுவேல் தங்கராஜ் கோரேஸ் ஆரம்ப ஜெபம் செய்தார்.திட்ட அலுவலர் முனைவர்.அந்தோணி செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த் தினார்.துணைமுதல்வர் முனைவர்.பொpயநாயகம்ஜெயராஜ் தலைமைதாங்கினார். முனைவர். ராஜ்குமார் சாலைப் பாதுகாப்புபற்றி,பேரா.சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் விபத்தில்லா பயணம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை திட்ட அலுவலர் முனைவர். பியூலாஹேமலதா வாசிக்க அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார்கள்.திட்டஅலுவலர் முனைவர். கீதாஞ்சலி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை திட்டஅலுவலர்முனைவர். சாந்திசலோமி தொகுத்து வழங்கினார்.நாட்டுநலப்பணித் திட்ட மாணவ,மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் எஸ்.டி.கே.ராஜன் ஆலோசனையின் படி துணைமுதல்வர் முனைவர். பெரியநாயகம் ஜெயராஜ் மற்றும் நாட்டுநலப்பணித் திட்டஅலுவலர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here