நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் ஃபிட் இந்தியா மூவ்மென்ட் தினம் கொண்டாட்டம்!

0
98
nazareth news

நாசரேத்,பிப்.02 தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக ஃபிட் இந்தியா மூவ்மென்ட் தினம் திருமறை யூரில் உள்ள கனோன் சித்தர் தாமஸ் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும்,செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், முதியோர் இல்லத்திலுள்ள ஆண்கள்,பெண்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பைர்சுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக ஃபிட் இந்தியா மூவ்மென்ட் தினம் திருமறையூரில் உள்ள கனோன் சித்தர் தாமஸ் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ மாணவியர்களுக் கும், செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், முதியோர் இல்லத்திலுள்ள ஆண்கள்,பெண்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் (பொ) தன்ராஜ் ஜேக்கப் கொடியேற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளித் தாளாளர் எ.டி.ஹெச். சந்திரன் தலைமை தாங்கினார்.நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் கள்ளாண்ட பெருமாள் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி 1996-ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களாகிய கண்ணா சில்க்ஸ் அதிபர் ரகுபதி, விருதுநகர் மாவட்ட முனிசிப் ஜட்ஜ் சண்முகக்கனி,அருணாச்சலம், ஐயப்பன், சுப்பிரமணி, மற்றும் செல்வக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மனவளர்ச்சி குனறியோர் பள்ளி மற்றும் செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எ.டி.ஹெச்.சந்திரன், தலைமையாசிரியர் பொறுப்பு தன்ராஜ் ஜேக்கப் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் கள் தனபால், சுஜித்செல்வசுந்தர், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஜெய்சன் சாமு வேல் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here