மன்னார்புரம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரி 10-வது ஆண்டு விழா! – வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத் பங்கேற்பு!!

0
113
nazareth

நாசரேத்,பிப்.02:தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 10-வது ஆண்டு விழா நடைபெற்றது.இந்த ஆண்டு விவசாயம் குறித்த விழிப்புணர்வை மாண வர்களுக்கு ஏற்படுத்த விவசாயம் என்ற தலைப்பில் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சுதாகர் மாணவர்களுக்கு விண்வெளி வளர்ச்சி குறித்தும் வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத் மற்றும் கௌரவ விருந்தினராக திசையன்விளை சாமாரியா பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபகுமார் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற ஆலோசனைகளையும் உத்வேக பேச்சாளராக ஆட்டோ அண்ணாத்துரை மாணவர்கள் தன்னம்பிக்கையிடன் செயல்பட ஊக்கப்படுத்;தினார். மேலும் 100 சதவீத தேர்ச்சி பெற காரணமான ஆசிரியர்களுக்கும் மற்றும் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் முத்தையா பிள்ளை; அறக்கட்டளை உறுப்பினர்கள் கிருஷ்ணநாராயணன், ரத்தின சபாபதி மற்றும் ரபீடா கனகராவ், ஜப்பான்மொழி ஆசிரியை செல்வி. காவா முரா ஆகியோர் விழாவினை சிறப்பித்தனர்.கல்லூரியின் முதல்வர் பேராசியர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், துணை முதல்வர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் சிவில் துறை தலைவர் சதிஸ் மணிகண்டன் வரவேற்று பேசினார். இயந்திரவியல் ஆசிரியர் ராம்கி நன்றி தெரிவித்தார். இதில் கல்லூரியின் மாணவ மாணவியர்களும் ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here