”குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சல்லடை போன்றது” – தூத்துக்குடியில் கனிமொழி பேச்சு

0
22
dmk kanimozhi

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கனிமொழி எம்பி கையெழுத்திட்டு துவங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கும் நிகழ்ச்சி சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைசிறுத்தை கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

’’இந்த நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து பிஜேபி அரசு நிறைவேற்றி வருகிறது. அதன்படி தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு பிறகு நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவே போராடத் தொடங்கியுள்ளனர்.

இந்த அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் அரசுக்கு விரோதமானவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றனர். உதாரணமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் பங்கெடுத்தனர். அவர்களையெல்லாம் இந்த சட்டத்தின் மூலம் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லை என சுலபமாக சொல்லிவிட முடியும். இந்த சட்டமானது சல்லடை போன்றது.

யார் யார் அந்த சல்லடையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கும். மற்றவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை செய்யும். எனவே அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கையெழுத்திட்டு அந்த கோப்புகளை குடியரசு தலைவருக்கு அனுப்பவேண்டும்.

நேற்றையதினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மிக நீண்ட நேர பட்ஜெட் உரையாக அமைந்த அந்த நிதிநிலை அறிக்கை நாட்டின் எந்த பிரச்சினைக்கான தீர்வையும் தராத நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. பல நல திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது நாட்டிற்கு எந்த வளர்ச்சியையும் அடுத்து தராது பட்ஜெட்டால் எந்த பலனும் இல்லை’’ என்றார் கனிமொழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here