நாசரேத் அருகே மூக்குப்பீறியில் இந்து முன்னணி கொடி சேதம்! – நடவடிக்கை கேட்கிறார்கள் பெ.சக்திவேலன் தலைமையில் இந்து முன்னணியினர்

0
98
nazareth

நாசரேத்,பிப்.02:நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி கொடிக்கம்பத்தில் உள்ள கொடி மற்றும் கொடிக்கயிறு ஆகிய வற்றை சேதப்படுத்தியவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென நாசரேத் காவல்நிலையத்தில் நெல்லைக் கோட்ட செயலாளர் பெ.சத்திவேலன் தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் மனு கொடுத்தனர்.

நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி பூங்கா தெருவில் இந்து முன்னணி கொடிக்கம்பம் கடந்த 22.06.2019அன்று இந்துமுன்னணி மாநில துiணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமாரால் கொடியுடன் ஏற்றப்பட்டது. இந்தக் கொடிக்கம்பத்தில் உள்ள கொடி மற்றும் கொடிக்கயிறு ஆகியவற்றை அடையாளம் தெரியாத சில விசமிகள் அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து நாசரேத்நகர இந்துமுன்னணி தலைவர் எஸ்.வெட்டுப்பெருமாள் நாசரேத் காவல்நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் ஆய் வாளர் சகாயசாந்தி வழக்குப்பதிந்து தீவிரவிசாரணை நடத்திவருகிறார். இதுகுறித்து கேள்விப்பட்ட துணை கண்காணிப்பாளர் பொறுப்பு (திருச்செந்தூர் சரகம்) பிரதாப் சம்பவஇடத்தை நேரில் பார்வையிட்டு உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறியதின் பேரில் இந்து முன்னணி பிரமுகர்கள் கலைந்து சென்றனர்.

நாசரேத்தில் சமீபகாலமாக கந்தசாமிபுரம், ஞானராஜ்நகர், மூக்குப்பேறி நாலுகம்பி ரோடு ஆகிய இடங்களில் கொடிக்கம்பத்திலுள்ள கொடி மற்றும் கொடிக் கயிறு ஆகியவற்றைகழற்றிஎடுத்துசென்றுள்ளனர்.சில கயவர்கள் செய்யும் செயலால் சகோதரர்களாக வாழ்ந்துவரும் நாசரேத் மற்றும் அதனைச்சுற்றியள்ள கிராமமக்கள் ஒருவருக்கொருவர் அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே நாச ரேத் காவல்நிலைய அதிகாரிகள் உரியவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டணை வாங்கிகொடுத்திட வேண்டும் என நாசரேத்வட்டாரமக்கள் விரும்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here