நாசரேத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க போராட்டம்!!

0
170
nazareth

நாசரேத்,பிப்.02:மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் நாசரேத் ரயில் நிலையம் முன்பு நாசரேத் நகர திமுக,மதிமுக,காங்கிரஸ்,இந்தியகம்யூனிஸ்ட் கட்சி,விடுதலைச்சிறுத்தை கள் கட்சி ஆகியவை இணைந்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டை வைத்து தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாசரேத் நகர திமுக செயலாளர் அ.ரவி செல்வக்குமார், நகர அவைத்தலைவர் அருள்ராஜ்,நகர பொருளாளர் சுடலைமுத்து,ஜாண்தேவதாஸ், மாவட்டதிமுக பிரதிநிதி சாமுவேல்,அன்பு தங்கபாண்டியன்,ஒன்றிய பிரதிநிதிநிதிகள் காந்தி,பா.ஜேம்ஸ்,மூக்குப்பீறி ஊராட்சிக்கழக திமுகசெயலாளர் கலையரசு,காங்கிரஸ் பிரமுகர்கள் சாரதி,ரவிராஜா,

மதிமுகமாவட்டஅவைத்தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங், ஆழ்வார்திருநகாp ஒன்றிய மதிமுக செயலாளர் வே.இரஞ்சன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக இலக்கியஅணி செயலாளர் பாபுசெல்வன்,ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக தொண்டரணி செயலாளர் கணேசன், 1-வது வார்டு மதிமுக செயலாளர் சுடலைமுத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரசெயலாளர் மாணிக்கம்,விடுதலைச் சிறுத்தைகள் மரியசூசை,பாஸ்கரதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here