பொது சுகாதார துறையில் பதவி உயர்வு காலதாமதத்தை கண்டித்து பொது சுகாதார அலுவலர் சங்கம் சார்பில் வரும் பிப். 13ம் தேதி ஆர்ப்பாட்டம்

0
84
thiruchnendur news

பொது சுகாதார துறையில் காலியாக உள்ள மருத்துவமல்லா மேற்பார்வையாளர், வட்டார சுகாதார இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் பணியை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து பொது சுகாதார அலுவலர் சங்கம் சார்பில் வரும் பிப். 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்செந்தூர் தெய்வா கல்யாண மஹாலில் நடந்தது. சங்க மாநில தலைவர் கங்காதாரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாரிமுத்து வரவேற்றார். மாநில பொதுசெயலாளர் லெட்சுமி நாராயணன் வேலையை அறக்கையை தாக்கல் செய்தார். மாநில பொருளாளர் செந்தில்குமார் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அறிக்கை மீது விவாதம் நடந்தது.

தமிழகத்தில் பொதுசுகாதார துறையில் காலியாக உள்ள மருத்துவமல்லா மேற்பார்வையாளர், வட்டார சுகாதார இன்ஸ்பெக்டர், தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் ஆகிய பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்புவதில் ஏற்படும் காலதாமதத்தை கண்டித்த அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதற்கட்டமாக வரும் பிப். 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,

இரண்டாவது கட்டமாக மார்ச் 5ம் தேதி சென்னையில் டி.எம்.எஸ். வளாகத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, ஜாக்டோ ஜியோ போராட்ட பாதிப்புகளை களையக்கோரி தமிழகத்தில் துறைவாரியாக சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்திற்கு 10 நிர்வாகிகள் கலந்து கொள்வது, இந்த இரு போராட்ட நடவடிகக்கைகளை திட்டமிட மாவட்ட செயற்குழு, முன்னணி ஊழியர்களை கூட்டங்களை வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதிக்குள் நடத்துவது. பொது சுகாதார துறையில் சுகாதார இன்ஸ்பெக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில செயலாளர்கள் மோகனமூர்த்தி, செல்வம், ஹரிஹரன், மாநில தணிக்கையாளர்கள் பாலமுருகன், தவிடன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here