வேலூரில் 23 வருடங்களுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றது !

0
14
vellur dmk

வேலூர்: வேலூரில் திமுக வெற்றிபெற்றது சாதாரண வெற்றி கிடையாது, மாபெரும் வெற்றி என்று புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக கடைசி நேரத்தில் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தோல்வியை தழுவி உள்ளார்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார். திமுக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது .

23 வருடங்களுக்கு பிறகு திமுக நேரடியாக வேலூரில் வெற்றிபெறுகிறது. ஆனால் இந்த வெற்றியை மோசமான வெற்றி, இமாலய வெற்றி கிடையாது என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் திமுக கட்சிக்கு இது ஒரு வகையில் இமாலய வெற்றி ஆகும். இங்கு இஸ்லாமிய வாக்குகள் அதிகம் இருந்தாலும் இத்தனை வருடங்கள் முடிவு என்னவோ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வந்தது இல்லை.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வேலூரில் திமுக கூட்டணி சார்பாக ஐயுஎம்எல் போட்டியிட்டது. அதேபோல் பாஜக கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சியின் ஏ.சி சண்முகம் போட்டியிட்டார். அதிமுக சார்பாக செங்குட்டுவன் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் விஜய் இளஞ்செழியன் வேறு போட்டியிட்டார்.

இதில் அதிமுகவின் செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்றார், பாஜக கூட்டணியின் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்றார். இஸ்லாமிய வாக்குகள் இருந்தும், திமுக இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தியும் இங்கு பாஜக அதிக வாக்குகளை வென்றது. திமுக சார்பாக ஐயுஎம்எல் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சியின் விஜய் இளஞ்செழியன் 21,520 வாக்குகள் பெற்றார்.

கணக்குப்படி பார்த்தால் இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜகவுண்ட சேர்ந்து 7 லட்சம் வாக்குகளை வென்று இருக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு தேமுதிக, பாமக என்று எல்லோரும் ஆதரவு அளிப்பதால், குறைந்தபட்சம் 7 லட்சம் வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதிமுக 4.77 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

அதே சமயம் போன தேர்தலில் காங்கிரஸ், திமுக என்று சேர்த்து 2.20 லட்சம் வாக்குகள் பெற்ற திமுக இந்த முறை 4.85 லட்சம் வாக்குகள் வென்றுள்ளது. அதாவது 2004க்கு பின் வேலூரில் வெற்றி பெறாமல் இருந்த திமுக இப்போது கூடுதலாக, புதிதாக 2.60 லட்சம் வாக்குகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதை திமுகவிற்கு கிடைத்த இமாலய வெற்றி என்று கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here