நாசரேத், குரும்பூர் பகுதிகளில் இந்து முன்னணி கொடி சேதம் – இந்து முன்னணி சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்ட நடத்த முடிவு

0
163
hindu munnani nazareth

நாசரேத்,பிப்.04:நாசரேத், குரும்பூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி கொடிக்கம்பத்தில் உள்ள கொடி மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றை சேதப்படுத்தி யவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாசரேத்நகர இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாசரேத் நகர இந்துமுன்னணி செயற்குழு கூட்டம் வாழையடி பத்திரகாளியம்மன் கோவில்வளாகத்தில் தலைவர் எஸ்.வெட்டுப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. நகரபொதுச் செயலாளர் சி.சுரே‘; வரவேற்று பேசினார். நகர துணைத் தலைவர் என்.கே.டி.தியாகராஜன்,ஆழ்வார்திருநகரி ஒன்றிய துணைத்தலைவர் றி.முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

வாழையடி கிளை தலைவர் சங்கர், திருவள்ளுவர்கா லணி கிளை தலைவர் ராமதாஸ், நகர பொருளாளர் சிவமாலை, நகர செயற்குழு உறுப்பினர்கள் கந்தராஜன், விஜய், கருப்பசாமி, செல்வத்திரவியம், அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நெல்லைக் கோட்ட செயலாளர் பெ.சத்திவேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி பூங்கா தெருவில் உள்ள இந்து முன்னணி கொடிக்கம்பத்தில் உள்ள கொடி மற்றும் கொடிக்கயிறு ஆகியவற்றை அடையாளம் தெரியாத சிலர் அறுத்து எடுத்து சென்றுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நாசரேத் மூக்குப்பீறி பகுதியான ஞானராஜ்நகர், அம்பாள்நகர், கந்தசாமிபுரம் மற்றும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு குரும்பூர் பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களில் கொடி மற்றும் கொடிக்கயிறு, கம்பம் ஆகியவற்றை சேதப்படுத்திய வண்ணம் சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்து முன்னணி கொடி, கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய சமூகவிரோதிகள்மீது உரியநடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என நாசரேத் நகர இந்து முன்னணி தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here