தினசரி ஒரு கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் – மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் தீர்மானம்

0
161
tuty news

கிராம மக்களின் கோரிக்கையை நேரடியாக கேட்டு தீர்மானிப்பதற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. சுதந்திரதினம், காந்திஜெயந்தி,குடியரசு தினங்களில் இக்கூட்டம் கூட்டப்படுகிறது. அந்த வகையில் காந்தி ஜெயந்திதினமான இன்று நாடு முழுவதிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடத்தப்பட்ட கூட்டத்தில், கிராம மக்களின் கோரிகையின்படி தினந்தோறும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மூலம் ஒரு கோடி லிட்டர் வரை தண்ணீர் வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து கீழஅழகாபுரியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, பஞ்சாயத்து துணைத்தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து செயலர் ஜெயரத்னம் வரவேற்றார்.

இதில், வட்ட வழங்கல் அலுவலர் வதனா, கீழஅழகாபுரி ஊர் தலைவர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், ஆனந்தி, முத்துமாலை, சப்&இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, கந்தசாமி, திமுக இளைஞரணி அம்பாசங்கர், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், 100சதவீத கொரோனா தடுப்பூசி போடுதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சிறுமியர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல் உள்ளிட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுபோன்று குமாரகிரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஜாக்சன்துரைமணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் முப்பிலியான் முன்னிலை வகித்தார்.

இதில், மண்டல துணை வட்டாட்சியர் ஆபிரகாம் தனசிங், நகர்புற வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன்துரைராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், அரசு அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here