வரி ஏய்ப்பில் ஈடுபட்ட விஜய் உள்ளிட்டோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் – தூத்துக்குடியில் அர்ஜூன்சம்பந்த் பேட்டி

0
46
arjunsampath news

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய் உள்ளிட்டோரின் சொத்துக்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் என தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பந்த் பேட்டியளித்தார்.

இந்து மக்கள் கட்சியின் வணிகர் சங்கம் சார்பில் அதனுடைய ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’நேற்றைய தினம் நடிகர் விஜய் அவர்களுடைய வீடு மற்றும் அவருடைய தொழில் நிறுவனங்கள் இங்கே வருமான வரித்துறை சோதனையிட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 150 கோடி ரூபாய்க்கும் மேல் அவர்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடித்து வெளியான பிகில் திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது அந்த கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வருமான வரியை செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி இருக்கிறார்கள்.

விஜய் மட்டுமல்ல அவரோடு கூட பணிமலர் அந்த கல்வி நிறுவனங்கள் உடைய தாளாளர் அவருடைய தகப்பனார் காலத்தில் இருந்து அவர்களுடைய மகள் வந்து திரைப்படத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் அவரும் பனிமலர் அந்த தொழில் நிறுவனங்களின் குடும்பத்தாரும் அதாவது ஜேப்பியார் குடும்பத்தாரும் விஜய்யும் இணைந்து சினிமா தொழில் தயாரிப்பில் அவர்கள் பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஆகவே வருமான வரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட நம்முடைய மத்திய அரசாங்கத்தின் உடைய துறைகள் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். சினிமாவுக்குள்ள வந்து நிறைய இந்த கிறிஸ்துவ நிறுவனங்கள் ஊடுருவி வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்’” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், ‘’தைபூசம், மகாசிவராத்ரி பண்டிக்கைக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்’’ என்றும் ’’அனைத்து தரப்பினரும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர்’’ என்றும் தெரிவித்த அவர், ’’பாகிஸ்தானிலிருந்து நிதி உதவி பெற்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது’’ என்றும் குற்றம்சாட்டினார். மேலும் அவர், ’’அதில் ஓரு அங்கம் தான் திமுக. அதிலிருந்து வரக்கூடிய பணத்தை வைத்துத்தான் 380 கோடி ரூபாய்க்கு பிரசாந் கிஷோரை திமுக தேர்தல் வல்லுனராக புக் செய்துள்ளனர்’’ என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here