தொண்டாமுத்தூர் காவல் நிலையத்துக்கு சத்குரு வாழ்த்து

0
151
isha

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ள தொண்டாமுத்தூர் காவல் நிலையத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சத்குரு அக்காவல்நிலையத்தின் ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐ.எஸ்.ஓ. 9001: 2015 தரச்சான்றிதழ் பெற்றதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். நமக்கு அருகில் இருக்கும் காவல்நிலையம், சுற்றுப்புறச் சூழலில் அக்கறையுடன் தனது சேவையிலும், திறமையான நிர்வாகத்திலும் தரத்தை கடைப்பிடித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறந்த நிர்வாக திறன் கொண்ட ஒரு குழு, குறைந்த அளவிலான குற்ற விகிதத்தை பராமரித்து வருகிறது. மேலும், காவல்நிலையத்தில் குடிமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பசுமையான, இனிமையான ஒரு சூழல் நிலவுவதை உறுதி செய்துள்ளது. இதனால், இது ஒரு சிறந்த காவல்நிலையமாக திகழ்கிறது. இது பல வகையிலும் இப்பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரத்தையும், இயற்கையான விழிப்புணர்வு தன்மையையும் பிரிதிப்பலிக்கிறது.

இவ்வாது சத்குரு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here