நாசரேத் அருகிலுள்ள கீழவெள்ளமடம் சி.எஸ்.ஐ. பரி. கன்னிமரியாள் ஆலயத்தில் 900 ( 800 பெண்கள் – 100 ஆண்கள் ) ஏழைகளுக்கு இலவச சேலை, லுங்கி, சட்டை, போர்வை, மற்றும் டவல் வழங்கும் விழா ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை நாசரேத் தூய. யோவான் பேராலய தலைமை குருவாணவரும் சேகர தலைவருமான எட்வின் ஜெபராஜ் தலைமை தாங்கி ஜெபம் செய்து தொடக்கி வைத்தார். சபை குருவாணவர் டிக்சன், கௌரவ சபை ஊழியர் ஞானராஜ், சபை ஊழியர் சுகிர்தராஜ், ஆசிரியர் பட்டுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் புத்தாடைகள் வாங்க வந்திருந்த அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.