நாசரேத் அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோவில் 56-வது வருஷாபிஷேக விழா!

0
9
nazareth news

நாசரேத்,பிப்.09:நாசரேத் அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோவில் 56-வது வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கானபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த நாசரேத் அருள்மிகு சக்திவிநாயகர்திருக்கோவில் 56- வது வருஷாபிஷேக விழாவினைமுன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு 8மணிக்கு மாக் காப்பு தீபாராதனை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 9 மணிக்கு அபிஷேகம் 10:35 மணிக்கு விமானத்திற்கு கலாஷாபிகம், 12:30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், பகல் 1மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது.அன்னதானத்தினை நாசரேத் அருள்மிகுசக்திவிநாயகர் கோவில் இந்து பரிபாலன சங்கதலைவர் ந.கணேசன் துவக்கி வைத்தார்.அன்னதானத்திற்கான ஏற்பா டுகளை நாசரேத் அருள்மிகு சக்திவிநாயகர் இந்துபரிபாலன சங்கதுணைத் தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் க.கணேசன், பொருளாளர் சு.ஸ்ரீதரன் உறுப்பினர்கள் மேகநாதன், நடராஜன், கோகுல், சங்கர், சு.சுப்பையா, மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மாலை 6 மணிக்கு அருளமுதம் என்ற தலைப்பில் குலசை ஆ.இல்லங்குடியின் சிறப்பு சமயச் சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திருச்செந்தூர் சு.திரு ஞானசம்பந்த ஒதுவார் தேவார இன்னிசையுடன் அருள்மிகு சக்திவிநாயகப்பெருமாள் திருவீதி வலம் வருதல் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here