நாசரேத்,பிப்.09: நாசரேத் நகர அமமுக செயலாளர் ஜெ.டேவிட் மனோகரன் ஒன்றிய அதிமுக அம்மா பேரவை செயலாளர் ராம்கோபால் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாசரேத் பேருராட்சி கழக செயலாளர் ஜெ.டேவிட்மனோகரன் ஆழ்வார்திருநகரி ஓன்றியஅதிமுக அம்மாபேரவை செயலாளர் க.ராம்கோபால் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் டி.ஜெயராஜ் ஏ.கே.மனோசே, எஸ்.பி.ரவீந்திரன், ஏ.குமரன், பி.ரமேஷ், ஏ.முனியாண்டி, ஒய்யான்குடி அதிமுக கிளை செயலாளர் ஜெ.ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.