மருந்துவர்கள், செவிலியர்களுக்கு பிரதமரின் வாழ்த்து அட்டை : தூத்துக்குடி பாஜக வழங்கியது

0
59
bjp news

கொரோனா தொற்றுக்காரணமாக உலகமே அல்லோலப்பட்டு மறுவாழ்வு பெற்று வரும்நிலையில், உலக நாடுகள் மக்களுக்கு தடுப்பூசிகளை போட்டு வருகிறது. அந்த வகையில் நமது நாடு இதுவரை 100 பேருக்கு தடுப்பூசிகளை போட செய்து சாதனை படைத்துள்ளது. பல நாடுகள் எதிர்பார்க்கவில்லை, வெளிநாட்டு பத்திரிக்கைகள் பல ஆண்டுகள் ஆகும் என்று கணித்தது, உள்நாட்டு எதிர்கட்சியினர் அதை வைத்து அரசியல் செய்ய காத்திருந்தது. இந்த நிலையில் 100 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட்டு முடித்திருப்பது உலக சாதனையாகவே பார்க்க முடிகிறது.

அது குறித்து இன்று காலையில் பாரத பிரதமர் மோடி, மக்களிடம் உரையாற்றினார். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள உதவிய மருத்துவ துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் அது சார்ந்த அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வாழ்த்து தெரிவித்தார். அவரின் வாழ்த்து செய்தியை தாங்கிய அட்டைகளை பாஜகவினர், மருத்துவ மற்றும் சுகாதார துறையினரிடம் நேரடியாக சென்று வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருந்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் வழங்கிய வாழ்த்து அட்டையை வழங்கினார்கள். மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரையும் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் சந்தித்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதில் மாவட்ட தலைவர் பால்ராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், OBC மாநில செயலாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட துணை தலைவர் தங்கமாரியம்மாள், மாவட்ட பொதுச்செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர் வீரமணி, வடக்கு மண்டல தலைவர் கனகராஜ், பொது செயலாளர் செல்லப்பா, மேற்கு மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மாவட்ட தலைவர் காளிராஜா, மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here