ஆறுமுகநேரில் ரேசன் கடையை செயல்படுத்திடக்கோரி கலெக்டரிடம் மனு

0
94
thondan subramani

ஆறுமுகநேரி பேரூராட்சி திசைக்காவல் தெற்கு தெரு உள்ளிட்ட பகுதி மக்களுக்குரிய ரேசன் கடை ஆறுமுகநேரி வடக்கு தெருவில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் நீண்டதூரம் நடந்துசென்று ரேசன் பொருட்களை வாங்கும் நிலை பல வருட காலமாக தொடர்கிறது.

இதற்கிடையே இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.7லட்சம் திட்ட மதிப்பீட்டில் திசைக்காவல் தெற்கு தெருவில் புதியதாக ரேசன் கடை கட்டப்பட்டது.

புதிய ரேசன் கடைக்கான கட்டுமானப்பணிகள் எல்லாம் முடிந்த நிலையில் இதுவரை புதிய ரேசன் கடை திறக்கப்படவே இல்லை. இதுதொடர்பாக பொதுமக்ககள் சார்பில், வழக்கறிஞர் தொண்டன்சுப்பிரமணி கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைக்கண்டித்தும், ரேசன் கடையை உடனடியாக திறந்து செயல்படுத்த கோரியும் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் பொதுமக்கள் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், ’’சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் ரேசன் கடையானது வாடகை கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் எந்த கடையில் வேண்டும் என்றாலும் ரேசன் பொருட்களை வாங்கிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வட்ட வழங்கல் அலுவலர்களின் தவறான தகவலால் இந்த ரேசன் கடை திறக்கப்படாத நிலை தொடர்கிறது.

இந்த நிலை மாறிடவும், பொதுமக்கள் அவதிப்படாமல் ரேசன் பொருட்களை வாங்கிடவும் ஏதுவாக புதிய கட்டிடத்தில் ரேசன் கடை முறையாக செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே நான்கு முறை மனு அளித்துள்ளோம் என்பதை நினைவுபடுத்திடவும், ரேசன்கடையை திறந்திடவும் வேண்டி இந்த மனுவை தற்போது அளித்துள்ளோம்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here