நாசரேத் அருகே வேதபுரம் தூய பவுல் ஆலய கன்வென்ஷன் கூட்டங்கள்! இரண்டு நாட்கள் நடைபெற்றது!!

0
589
nazareth news

நாசரேத்,பிப்.11:நாசரேத் அருகிலுள்ள வேதபுரம் தூய பவுல் ஆலய கன்வென்ஷன் கூட்டங்கள் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள வேதபுரம் தூய பவுல் ஆலய 75-வது பிரதிடைப் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள்கள் ஆவிக்குரிய கன்வென்‘ன் கூட்டங்கள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.நாசரேத் டிவைன் இசைக்குழுவினர் ராஜகுமார் தலைமையில் பாடல்களைப் பாடினர்.ஆனந்தபுரம் சேகர குரு ஜி.ஜெபஸ் றி. ஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்து கன்வென்ஷன் கூட்டங்களை துவக்கி வைத்தார்.

சபைஊழியர் கோயில்பிச்சை முன்னிலை வகித்தார்.இரண்டு நாள் கள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களிலும் சங்கரன்கோவில் இயேசு தருவார் ஊழியய்களின் நிறுவனர் சகோ.ஜெ.சாம்சன் தேவ செய்தி கொடுத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை ஆனந்தபுரம் சேகரகுரு ஜி.ஜெபஸ் றி.ஆபிரகாம் தலைமையில் சபை ஊழியர் கோயில்பிச்சை மற்றும் சபை மூப்பர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here