நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் வேலை வாய்ப்பு கருத்தரங்கு

0
164
nazareth news

நாசரேத்,பிப்.10:நாசரேத் மர்காஷிஸ் கல்லூர்யின் கருத்தரங்கு கூடத்தில் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ.சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை தாங்கினார்.

நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் ஜெயபாலன், பொருளாளர் ஆம்ஸ்டிராங் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் துணை முதல்வர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்று பேசினார். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. செயலாளர் லேவி அசோக் சுந்தரராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை ஆடிட் சுப்பிரடென்ட் சக்திகுமார் மாணவ,மாணவி களுக்கு வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளித்தார். இக்கருத்தரங்கில் கல்லூரியின் மாணவ,மாணவிகள் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. நிh;வாகிகள் எபனேசர் சாம்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடு களை கல்லூரிச் செயலாளர் எஸ்.டி.கே.ராஜன் தலைமைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here