பணிமாறுதல் ஆணையை வழங்காமல் இழுத்தடித்த போக்குவரத்துகழக கிளைமேலாளர் – குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டு சாதித்த ஊழியர்

0
293
setc news

கோவில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 57). தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணி செய்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 மகள்ககளும் இருக்கிறார்கள். மகள்கள் இருவரும் தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பணி மாறுதல் கேட்டு வெங்கடசாமி விண்ணப்பித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு திருநெல்வேலி பணிமனையில் பணி ஒதுக்கீடு செய்து பணி ஆணை பிறப்பிக்கப்பட்டது. தூத்துக்குடியில் தான் பணிபுரியும் பணிமனையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தில் ஒப்புதல் பெற கிளை மேலாளரிடம் அவர் அணுகியபோது கிளை மேலாளர் அபிமன்யு அவருக்கு பணி மாறுதலுக்கான கடிதத்தில் கையெழுத்திடாமல் அவரை அலைகழித்தத்ததாக தெரிகிறது. மேலும் இரவு பகலாக ஓய்வின்றி பணியில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மனரீதியாக வெங்கடசாமி பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்றும் பணிமாறுதல் கடிதம் கேட்டு கிளை மேலாளரை அணுகியபோது அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பாக வந்தார்.

பிச்சமணி உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வெங்கடசாமி குடும்பத்தாருடன் அந்த இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தின் முடிவில், கிளை மேலாளர் அபிமன்யு, வெங்கடசாமிக்கு பணி மாறுதல் ஆணைக்கடிதத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து வெங்கடசாமி தனது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here