தூத்துக்குடி மாநகராட்சியில் 73 வது சுதந்திர தின விழா கொண்டாடம்

0
5
thoothukudi corporation

தூத்துக்குடி மாநகராட்சியில் 73 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகடிநச்சியில் மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், தேசியக் கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தினார்.

’’நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் இவ்வேளையில் அடிமைப்பட்ட இந்தியாவை மீட்டெடுக்க போராடிய வீரம் செறிந்த தலைவர்கள், சுதந்திர தாகத்தை மக்களிடையே பரப்பிய மகாகவி பாரதி போன்றோர் தன்னலம் கருதாது நாட்டிற்காக தங்களையே அர்ப்பணித்த தியாகிகளை நினைவு கூறுவதோடு, நமது நாடானது மருத்துவம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் தற்போது வளர்ச்சி கண்டிருப்பினும், 100வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் வேளையில் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற முன்னேறிய நாடாக திகழும் வகையில் நாம் ஒவ்வொருவரும் நமது கடமையினை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்கள்.

மேற்படி விழாவில் 20 வருடம் சிறப்பாக பணியாற்றிய வாகன ஓட்டுநர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் நற்சான்றிதடிந வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை பணியில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதடிந வழங்குதல், பசுமைப்பணியில் மாநகராட்சியுடன் இணைந்து செயல்படும் சமூக ஆர்வலர்களுக்கு நற்சான்று வழங்குதல், தூய்மை காவலர்களுக்கு மேல் அங்கி வழங்குதல் மற்றும் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகடிநச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் மாநகர செயற்பொறியாளர் , உதவி ஆணையர் (ப) மாநகராட்சியின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். முன்னதாக, சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 10 அம்மா உணவகங்களிலும் இன்று காலை உணவுடன் இலவசமாக கேசரி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here