’’படித்த மணமக்கள் மத்தியில் நான் அரசியல் பேச விரும்பவில்லை’’ – தூத்துக்குடி கீதாஜீவன் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்

0
93
m.k.staline

தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏவும் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் இல்ல திருமண வரவேற்பு விழா 14.02.2020 அன்று நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போதுதான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

‘’தி.மு.க தூண்களில் ஒருவராக தலைவர் கலைஞரின் முரட்டுபக்தனாக விளங்கியவர் என்.பெரியசாமி அவர்கள். அவர் இந்த இயக்கத்திற்கு ஆற்றிய பணி என்பது இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அதெல்லாம் நமக்கு பெருமையாக இருக்கிறது.

என்.பெரியசாமி அவர்களை தன்னுடைய ’முரட்டு பக்தன்’ என தலைவர் அவர்கள் எப்போதும் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர் இப்போது இல்லை என்றாலும் அவர் விட்டு சென்ற மாவட்ட பணியை எவ்வித தொய்வும் இல்லாமல் அவருடைய வாரிசான கீதாஜீவன், சிறப்பாக செய்து வருகிறார்.

இன்றைய தினம் கீதாஜீவன், தன்னுடைய மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கழக நிகழ்ச்சி போல நடத்திக் கொண்டிருக்கிறார். வழிநெடுக பார்க்கும்போது அது தெரிகிறது. இந்த நிகழ்ச்சி குடும்பத்துக்கு மட்டும் பயன்படும் நிகழ்ச்சியாக இருக்க கூடாது. கழகத்துக்கும் பயன்பட வேண்டும் என்கிற வகையிலே நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். என்னுடன் என் துணைவியாரும் வந்திருக்கிறார். இந்த தொகுதி எம்.பியும் என்னுடைய தங்கையுமான கனிமொழியும் கலந்து கொண்டிருக்கிறார். இதுமட்டுமில்லை நீங்களெல்லாம்கலந்து கொண்டிருக்கிறீர்கள். நம்ம வீட்டு நிகழ்ச்சி என்று எல்லோரும் கலந்து கொண்டிருக்கிறோம். இதுதான் திராவிட குடும்ப பாச உணர்வு.

மணமக்களுக்கு நாம் ஆலோசனை சொல்லவோ அறிவுரை சொல்லவோ முடியாது. காரணம் அவர்கள் எல்லாம் படித்தவர்கள். அவர்களுக்கு அரசியல் உட்பட எல்லாம் தெரியும். அவர்களுக்கு அறிவுரை சொல்வதாக இருந்தால் அது அதிகப்பிரசிங்கித்தனம் என நான் உணர்கிறேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுகிறவர்களின் எப்படி உணர்ச்சியோடு நடந்து கொள்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். நாட்டில் எந்தமாதிரியான போராட்டங்கள், எப்படிபட்ட கண்டனங்கள் எல்லாம் நடந்து வருகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு கட்சியை கடந்து பலரும் வந்திருப்பார்கள். எனவே இந்த இடத்தில் இதற்குமேல் நான் அரசியல் பேச விரும்பவில்லை. வரக் கூடிய காலங்களில் உங்களுக்கு பயன்படுகிறதை நீங்கள் செய்யுங்கள். மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here