தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா – 42 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

0
7

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. அந்த விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்திப்நந்தூரி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் 73வது சுதந்திர தின விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (15.08.2019) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து வெள்ளைப்புறா மற்றும் வண்ண பலூன்கள் பறக்கவிட்டார் பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர், ஏற்றுக்கொண்டு, சிறப்பாக பணியாற்றிய 35 காவல் துறையினருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் 33 நபர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். பின்னர் முன்னாள் படைவீரர் நலன், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அலுவலர்கள் என மொத்தம் 340 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், வருவாய் துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 10 பயனாளிகளுக்கு மாதம்தோறும் தலா ரூ.ஆயிரம் பெறுவதற்கான உத்தரவுகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.1.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.46.75 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும், வேளாண்மைத்துறை மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.2.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டி மற்றும் எம்பிராய்டரி தையல் இயந்திரங்களையும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.14,099 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் விலையில்லா தேய்ப்பு பெட்டியையும், மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.5.98 லட்சம் மதிப்பிலான ஆட்டோ தொழிலுக்கான கடன் உதவிகளையும், மகளிர் திட்டம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்பிலான அம்மா இருசக்கர வாகனங்கள், வங்கி பெருங்கடன்,

வங்கி நேரடி கடன் என 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறை மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2.22 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை டெபாசிட் செய்யப்பட்டதற்கான உத்தரவினையும் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்திய தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி கல்வி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்கள் (சி.வ அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகம், தூத்துக்குடி), எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி பதின்மமேல்நிலைப்பள்ளி, சாயர்புரம் தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், இணை இயக்குநர் (மருத்துவ நல பணிகள்) மரு.பரிதாஷெரின், கோட்டாட்சியர்கள் ஜயா (கோவில்பட்டி). செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர்), துணை ஆட்சியர் (பயிற்சி) சுப்புலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி,

உதவி இயக்குநர்கள் உமாசங்கர் (ஊராட்சிகள்), மாகின் அபுபக்கா, (பேரூராட்சிகள்), மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் தியாகராஜன் (பொது),பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி), பாலசுப்பிரமணியன் (வேளாண்மை),கிறிஸ்டி (கணக்கு), மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் முத்துலட்சுமி,

சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, மாற்றதிறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கரநாராயணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here