விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை, அறிவியல் கல்லூரி – முதலமைச்சர் திறந்து வைத்தார்

0
157
vilathikulam callege

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.சண்முகையா,

மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இணை ஆணையர் ரேணுகா தேவி கல்லூரி செயலர்/இணை ஆணையர்/செயல் அலுவலர் குமரதுரை, கல்லூரி முதல்வர் ஜெயாலி லசீதா உள்ளிட்ட ஒன்றிய,பேரூர் கழகச் செயலாளர்கள் அணி நிர்வாகிகள் வியாபாரப் பெருமக்கள் கல்லூரி ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here