ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம்

0
283
gumaragurupara arts callage

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரியின் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் ‘’வாழ்க்கையை கொண்டாடுவோம்’’ என்ற தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தாக்க சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ் அலுவலர் சங்கரபாண்டியன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பயிற்சி முகாமில், தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு தலைமை மேலாளர் அமலவளன் ‘நோயின்றி மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி&வாழ்வின் நோக்கம் என்ன?’ என்ற தலைப்பிலும், கணேஷ்குமார் ‘எய்ட்ஸ் நோய் வருவதில் இருந்து பாதுகாப்பது எப்படி?’ என்ற தலைப்பிலும் விரிவாக எடுத்துரைத்தனர். பேராசிரியை சாந்தி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். பயிற்சி முகாமினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில், பேராசிரியை, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், செஞ்சுருள் திட்ட அலுவலர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here