கோ. வெங்கடசுவாமிநாயுடுகல்லூரியில் இராணுவ வீரர்களுக்கு மரக்கன்று நட்டு அஞ்சலி

0
113
kvp news

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை மற்றும் இயற்கை கழகத்தின் சார்பாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் ந.ரெ. சாந்தி மகேஸ்வரி மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ வீரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மறைந்த ஒவ்வொரு இராணுவ வீரர்களின் நினைவாக 13மரக்கன்றுள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் பா. மகேஷ்குமார் மற்றும் இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.மாரிச்சாமி ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here