ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

0
61
rajuni news

தமிழ்த்திரையுலகில் நீண்டகாலமாக நம்பர் -1 ஆக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமா மூலம் நல்ல கருத்துக்களை கூறிவரும் ரஜினி, அரசியல் மூலமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அறத்தை நிலைநாட்டும் ஆன்மிக அரசியலை கொண்டு வருவேன் என்றார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் குறிப்பிட்ட நேரத்தில் அரசியலுக்குள் நுழையமுடியாமல் போனது. கடந்த சட்ட மன்ற தேர்தலில் எப்படியும் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேவேளை தனது ரஜினி மக்கள் மன்றம் தனது சேவையை தொடரும் என்று ரஜினி அறிவித்தார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ‘ரஜினி மக்கள் மன்றம்’ சார்பில் ரசிகர்கள் தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று ரஜினியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது மக்கள் மன்றத்தினர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இனிப்பு வழங்குவது என்று உதவிகளை செய்தனர்.

தூத்துக்குடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற இணைச்செயலாளர் வி.பி.எம் என்கிற டாக்டர் பழனிமஹாராஜன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒன்றிய பகுதிகளில் 28 இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு சேலை, வேட்டி மற்றும் இனிப்புகளை வி.பி.எம்.பழனிமஹாராஜன் வழங்கினார். அவருடன் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.

கூட்டாம்புளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலசேகர், பட்டுலிங்கம்,அசோக்குமார்,பால்த்துரை, பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியலுக்கு வரமாட்டேன் என்று தலைவர் சொன்ன பிறகும், எந்த வித எதிர்பார்ப்பில்லாமலும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here