தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடிப்படைக்கு 4 புதிய வாகனம் – மாவட்ட எஸ்.பி பார்வையிட்டார்

0
56
thoothukudi sp news

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடிப்படைக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் ரூபாய் 44 லட்சம் மதிப்புள்ள 4 புதிய ஃபோர் ஸ் டிராவலர் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடிப்படைக்கு 4 புதிய ஃபோர்ஸ் டிராவலர் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வாகனங்களில் ஒன்று ஓட்டுனருடன் 26 பேர் அமர்வு கொண்டதும், மற்ற மூன்றும் 18 பேர் அமர்வு கொண்ட வாகனங்களாகும். இந்த நான்கு வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் 43, 81,000 மதிப்பு கொண்டதாகும்.

இந்த வாகனங்கள் காவல்துறையினர் விரைவாக செல்வதற்கும், அதிகளவு பயணிப்பதற்கும் வசதியாக உள்ளது. மேற்படி நானகு வாகனங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பார்வையிட்டு, அவற்றை சிறந்;த முறையில் பராமரிப்பதற்கு ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன், காவல்துறை மோட்டார் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here