திருச்செந்தூரில் மெல்ல மெல்ல மலர்ந்து வரும் தாமரை – சட்ட மன்றத் தேர்தலை நோக்கிய பயணம்

0
285
bjp news

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கோஷம் எழுப்பினார் முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தற்போதைய தெலங்கானா கவர்னருமான தமிழிசைசெளந்திரராஜன். அந்த கோஷம் பல்வேரு கேலி கிண்டல்களுக்கு நடுவே மெல்ல மெல்ல வளர்ந்தது. தமிழகத்தில் கால் ஊண்றவே விடமாட்டோம் என்கிற எதிர்ப்பாளர்களை தாண்டி சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறது தாமரை.

அதேபோல் தமிழகத்தில் பாஜகவிற்கு எந்த விதத்திலும் சாதகமான சூழ்நிலை அமைந்துவிட கூடாது என்கிற அக்கறையோடு தற்போதைய தமிழக அரசு செயல்படுவதாகவே தெரிகிறது. நேரடியாகவே பாஜகவை மதவாத கட்சி என்று விமர்சித்த திமுக தற்போது அந்த வாதத்தை மறைத்து வைத்துவிட்டது. அந்த வார்த்தை இப்போது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவிவிடும் என்று கணித்திருக்கிறது திமுக அரசியல் கணிப்பு குழு.

அதனால்தான் எந்த திமுக தலைவர்களும் இந்து மதம் குறித்து எந்த விமர்சனத்துக்குள்ளும் மூக்கை நுழைப்பதில்லை. மாறாக இந்து மத விரும்பிகள் போல் காட்டிக் கொள்கிறார்கள்.

தவறுதலாக கூட தமிழகத்துக்குள் பாஜகவுக்கான பிளஸ் பாயிண்ட் தெரிந்துவிட கூடாது என கண்ணும் கருத்துமாக இருப்பதாகவே தெரிகிறது. எதாவது பாஜகவுக்கு சாதகமான விவாதங்கள் போய் கொண்டிருந்தால் எதாவது ஒரு பரபரப்பு செய்தி ஓட்டிவிடப்படுகிறது. பாஜக தலைவர்கள் வந்தால், பாஜக பெரிய அளவில் எதாவது செய்தால் அது தமிழகம் முழுவதும் பேசுவது போல் ஆகிவிடும் அளவிற்கு விடுவதில்லை. மாரிதாஸ் கைது விவகாரத்தில் முதலில் நீதி மன்றம் ரத்து செய்தது.

தமிழகம் முழுவது மாரிதாஸ் பேசப்பட்டார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக செய்தியாளர்களிடன் பேசியது எல்லாம் பாஜகவுக்கு சாதகமான அலையை உருவாக்குவதாக இருந்தது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதனால் மீடியாக்கள் அந்த பக்கமாக சென்றுவிட்டன. போதாதென்று மாரிதாஸ் மீது பழைய வழக்கை தட்டி எடுத்து அவரை கைது செய்து உள்ளே வைத்துவிட்டது திமுக அரசு.

இப்படியாக பாஜகவை எள் அளவிலும் தமிழகத்தில் வளரவிட கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கையாக இருப்பதாகவே தெரிகிறது. இந்தநிலையில் தென் தமிழகத்தில் பாஜக தலை தூக்கும் நிலை உருவாகியிருக்கிறது. கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற போது ஒரு லட்சம் பேர்களை இலக்காக வைத்து ஆட்களை கூட்டினார் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஆனால் மதுரை அழகர் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமானால் தடுப்பூசி போட்டால்தான் கலந்து கொள்ள முடியும் என்கிற கட்டுபாடு பாஜக ஆதரவாளர்களை கடுப்பாக்கியிருக்கிறது.

மிக விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் வரப்போகிறது. அதற்கு அரசின் கட்டுப்பாடு நிலை என்ன என்பதை பாஜக ஆதரவாளர்கள் கவனிக்க காத்திருக்கிறார்கள். இப்படியாக போட்டி போட்டு கட்சியை வளர்க்கும் இடத்திற்கு தமிழகத்தில் பாஜக தலை தூக்கியிருக்கிறது.

பெண்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கும் வகையில் பெண்களுக்காக பிரதமர் செய்திருக்கும் நன்மைகளுக்கு பேரணியாக சென்று பிரதமர் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் திருச்செந்தூர் ஒன்றியம் வள்ளிவிளையில் பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு முன்பாக பிரச்சார வண்டியில் பேரணி குறித்தும் மோடிஜி பெண்களின் முன்னேற்றத்திற்காக வகுத்த திட்டம் குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பேரணியில் 100 மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட மகளிர் அணி தலைவர் தேன்மொழி, மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் மகாலட்சுமி,மாவட்ட மகளிர் அணி செயலாளர் லதா , மாவட்ட மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் புஷ்பா,திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் தங்கரதி, ஆழ்வை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, தூத்துக்குடி கிழக்கு மண்டல தலைவர் தனலெட்சுமி,தூத்துக்குடி வடக்கு மண்டல தலைவர் லீலாவதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பர்வதவர்த்தினி,அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் விண்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மற்றும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுசெயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆக திருச்செந்தூர் வட்டாரத்தில் பாஜகவை பெரிய அளவில் வளரவும் திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதியில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெறச் செய்யவும் திட்டமிட்டு செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here