தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு தீபம்!

0
148
nazareth news

நாசரேத்,பிப்.29: ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்டராக்ட் கிளப் சார்பாக போலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து நாடுகளிலும் போலியோ நோயை முற்றிலும் ஒளிக்கவும், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமாக வேண்டியும் கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியை கல்லூரி தாளாளர் முத்தையா பிள்ளை தொடங்கி வைத்து போலியோ நோய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்த கே 2 கே 2020 என்ற வாகனம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பகுதிகளுக்கு தீபம் ஏற்றி சென்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இவ்வாகனம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சுரேஷ், தங்கராஜ் தாம்சன், துணை முதல்வர் விமலா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here