கூட்டாம்புளி அருகே திருமலையாபுரத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

0
40
meadical camp

கூட்டாம்புளி அருகேயுள்ள திருமலையாபுரத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் முடிவுற்ற நிலையில், கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்திடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் ஏதுவாக கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவமுகாம்களை நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராஜன் ஆலோசனைப்படி புதுக்கோட்டை கால்நடை மருத்துவமனை சார்பில் கூட்டாம்புளி அருகேயுள்ள திருமலையாபுரத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மருத்துவர் அன்டனி சுரேஷ் தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர் காசிராஜன் தலைமையில் கால்நடை பராமரிப்பு ஆய்வாளர்கள், உதவியாளர்கள் குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, திருமலையாபுரம், தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கோழி, ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் வந்து பங்கேற்றனர்.

முகாம் முடிவில், 200கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசியும், 645ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் மலட்டுதன்மை நீக்கம், ஆட்கொல்லிநோய் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

பேரூரணி கால்நடை மருத்துவமனை சார்பில் வரும் 20ம் தேதி(திங்கட்கிழமை) காலை 8மணி முதல் மாலை 3மணி வரை திம்மராஜபுரத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதில், விவசாயிகள், பொதுமக்கள் கால்நடைகளுடன் பங்கேற்று பயன்பெறுமாறு கால்நடை பராமரிப்புத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here