நாசரேத்,பிப்ரவரி 29:நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் வேதம் வாசிக்க பிரகாசபுரம் மூத்த குருவானவர் ஜெபவீரன் ஜெபம் செய்து ஆரம்பித்து வைத்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் சிறப்பு விருந்தினரை வாழ்த்தி வரவேற்று பொன்னாடை அணிவித்தார். மாணவி ஜெய், உறுதிமொழி கூறினார். மாணவி ஐஸ்வர்யா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு பள்ளி ஆண்டு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக அனைத்து இந்தியா தனியார் பள்ளி பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் ஜெயக்குமார் சிறப்புறையாற்றினார் தியாகராசன் கோயில்நாயகம் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களின் பெயரை பள்ளித் தலைவர் சத்தியவதி மனோகரன் மற்றும் உதவி முதல்வர் மகிலா சரவணன் வாசிக்க பிளாரன்ஸ் தியாகராசன் பரிசுகளை வழங்கினார். மாணவர் அமல்கரோல் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி ஆண்டு விழாவில் மாணவ மாணவியர்களின் நடனம், நாட்டியம், நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழா ஏற்பாட்டினை ஆசிரியப் பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவி மரியம் நன்றியுரை கூறினார்.