டிசம்பர் 26ம் தேதி மாவட்ட அளவிலான செஸ் போட்டி – காமராஜ் கல்லூரி முதல்வர் தகவல்

0
29
kamaraj college thoothukudi

தூத்துக்குடி, டிச. 20:

தூத்துக்குடியில் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியும், மாவட்ட சதுரங்க கழகமும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான செஸ் போட்டி டிசம்பர் 26ம் தேதி காலை 9 மணிக்கு காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. போட்டிகள் 9 வயது, 11 வயது, 13 வயது, 17 வயதுக்குள்பட்டோர் பிரிவு, மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் இந்தப் போட்டியில் பங்கு பெறலாம்.

போட்டிக்கான நுழைவுக் கட்டணத்தை www.easypaychess.com என்ற இணையதளத்தில் டிசம்பர் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும். போட்டியில் பங்குபெறும் வீரர்கள் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது பள்ளி அடையாள அட்டை என ஏதாவது ஒன்று தாக்கல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9489003266, 8760921739, 9626690823 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here