தூத்துக்குடியில் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய நல்லாட்சி தினம் கொண்டாட்டம்

0
147
bjp news

தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் மூலம் தேசிய நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97 வது பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக இன்று(26ம் தேதி) தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் ஆத்தூர் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பயன் அடைந்தார்கள். இந்த முகாமிற்கு மாவட்ட தலைவர் பிஎம் பால்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விவேகம் ரமேஷ் கலந்து கொண்டார். மேலும் மருத்துவப்பிரிவு மாவட்ட தலைவர் மேரி ரோசாரி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் எஸ் காளி ராஜா, துணைத் தலைவர் ஆர். ஜெயக்குமார், விவசாய அணி பிரிவு மாவட்ட செயலாளர் தில்லை யோகானந்த், இளைஞர் அணி மாவட்ட தலைவர் விக்னேஷ், வடக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப தலைவர் கலைச்செல்வன் மற்றும் மண்டல நிர்வாகிகள் பிரகாஷ் நாகராஜன் லிங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here