தூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு மையத்தை துவக்கிய ஸ்டெர்லைட்

0
37
sterlite news

லாஜிஸ்டிக்ஸ் பயிற்சி மூலம் ஆண்டுதோறும் தூத்துக்குடியைச் சேர்ந்த 400 இளைஞர்கள் பயனடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறையில் நேரடியாக 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிபுரிகின்றனர். இது 10 சதவீத CAGR இல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது எதிர்காலத்தில் அதிக வேலைகளை உருவாக்கும்.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முத்துச்சரம் முன்னெடுப்பின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான தாமிர முத்துக்கள், தூத்துக்குடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல்வேறு படிப்புகளில் திறன் பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதேப்போல, லாஜிஸ்டிக் வர்த்தகத்தை முதன்மையாக கொண்டு புதிய திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களில் இரு பிரிவுகளாக 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஏற்கனவே தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு மையத்தில், தையல் இயந்திரம் ஆபரேட்டர், வெல்டிங், மின்சாரம், தளவாடங்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய 5 தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த 5 வர்த்தகங்களும், தேசிய திறன் மேம்பாட்டு அறிக்கையின் மூலம் கவனம் செலுத்த வேண்டிய தொழில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறையில் நேரடியாக 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிபுரிகின்றனர். இது 10 சதவீத CAGR இல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது எதிர்காலத்தில் அதிக வேலைகளை உருவாக்கும்.

இதேபோல், தூத்துக்குடி இளைஞர்களுக்கு நன்மை அளிக்க கூடிய வகையில், திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கும் நோக்கத்துடன், ஸ்டெர்லைட் காப்பர் ஒரு புதிய திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது. வேதாந்தா அறக்கட்டளை உதவியின் கீழ் இயங்கும் இந்த மையம், அனைவரும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி பெறக்கூடிய வகையில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், மக்கள் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

1992ஆம் ஆண்டு முதல், வேதாந்தா அறக்கட்டளை, அதன் திறன் மேம்பாட்டு மையங்கள் மூலமாக வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதுவரை, நாடு முழுவதும் உள்ள 180 வேதாந்தா ரோஜ்கார் மையங்கள் மூலமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 2021-22 ஆம் ஆண்டில் 101 புதிய மையங்களைத் தொடங்க உள்ளது. முதல் முறையாக தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்துடன் இணைந்து புதிய ரோஜ்கார் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையம், திறன் பயிற்சி துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மூலமாக பயிற்சி அளித்து, தூத்துக்குடி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்.

முதலவதாக, 3 மாத காலங்களுக்கு நடத்தப்படும் சரக்கு எழுத்தர் பயிற்சியில் இதுவரை 50 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பயிற்சி இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு உதவும். பயிற்சி பெறுபவர்களில் , குறைந்தபட்சம் 70% நபர்களுக்கு திறனுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படவேண்டும் என ஸ்டெர்லைட் உறுதி பூண்டுள்ளது.

சமூக முன்னெடுப்புகள் மூலம் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

வேதாந்தா லிமிடெட்:

வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான வேதாந்தா லிமிடெட், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வணிக நடவடிக்கைகளைக் கொண்ட உலகின் முன்னணி இயற்கை வள நிறுவனங்களில் ஒன்றாகும். வேதாந்தா நிறுவனம், எண்ணெய், எரிவாயு, துத்தநாகம், ஈயம், வெள்ளி, தாமிரம், இரும்புத் தாது, அலுமினியம் மற்றும் மின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

நிர்வாகம் மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில் சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

வேதாந்தா நிறுவனம், CII-ITC Sustainability Award, FICCI CSR Award, Dun & Bradstreet Awards in Metals & Mining & The Great Place to Work ஆகிய விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வளர்ச்சியில் வேதாந்தா பெரும் பங்காற்றி வருகிறது. இதுவரை எந்தவொரு தனியார் நிறுவனமும் பங்காளிக்காத வகையில், கடந்த 2019 ஆம் நிதியாண்டில் 42,560 கோடி ரூபாய் அளவில் ஸ்டெர்லைட் நிறுவனம் வருவாய் ஈட்டி கொடுத்தது. வேதாந்தாவின் செயல்பாடுகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பங்களிக்கின்றன. வேதாந்தா லிமிடெட் மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் நியூயார்க் பங்குச் சந்தையில் ஏடிஆர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, www.vedantalimited.com என்கிற இணையதள முகவரியை அணுகவும்.

பொறுப்புத்துறப்பு :

இச் செய்தி வெளியீட்டில் எதிர்காலம் தொடர்பான அறிக்கைகளே இடம் பெற்றுள்ளன. இருப்பினும், அரசியல், பொருளாதாரம், வணிகம், லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச், உலோக விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், உள்ளிட்ட காரணிகளால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here