ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு,செவுள்வலை படகுகள் கட்டிட மீனவர்களுக்கு 50 சதவீதம் மானியம்

0
29
fish

ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டிட மீனவர்களுக்கு 50 சதவீதம் மானியம் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சிய செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

’’அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்புமற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஓர புதிய திட்டத்தினை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்புமற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதியமீன்பிடி விசைப்படகினை கட்டிடபட கொன்றிற்காகும் செலவினத்தில் 50 விழுக்காடுஅதிகபட்சமாகரூ.30.00 இலட்சம் வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

தமிழகத்தை சார்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்டகுழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விணணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்பப் படிவங்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in -லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டுநெறி முறைகளின்படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்துறை ஆணையர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டிடங்கள், 3-வது தளம்,கால்நடை மருத்துவமனை வளாகம், 571,அண்ணாசாலை, நந்தனம், சென்னை-600 035 என்ற முகவரிக்கு பதிவுஅஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 14.02.2022 வரை விண்ணப்பம் அளிக்கவேண்டும். விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம் தகுதி வாய்ந்த கப்பல்ஃமீன்பிடிகலன் கட்டுமானவரை வாளரிடமிருந்து (Naval Architect )பெற்று அசலாக கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகைசீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.

மேலும்,இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்குமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஉதவி இயக்குநர், தூத்துக்குடி அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்’’ என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here