கயத்தாறில் அதிமுக சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு – மாராத்தான் போட்டி

0
554
mla chinnappan news

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ஏற்பாட்டின் பேரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், பெண் குழந்தைகள் தின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு மாராத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ. ராஜூ கலந்துகொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. மூத்தோர், இளையோர் என இரு பிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.18 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மூத்தோர் பிரிவில் கயத்தார் சாலைப்புதுரைச் அருண் முதல் இடத்தையும், சிவகாசியை சேர்ந்த குணளான் 2வது இடத்தையும், சேலத்தை சேர்ந்த மாணிக்கவேல் 3வது இடத்தையும் பிடித்தனர்.12கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பார்வதி நாதன் முதல் இடத்தையும், அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் 2வது இடத்தையும், பாலஇசக்கி 3வது இடத்தையும் பெற்றனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3இடங்களை பிடித்தவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அதிமுக கயத்தார் ஒன்றியச் செயலாளர் வினோபாஜி,நகர செயலாளர் கப்பல் ராமசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here