சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில், சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பரிசு

0
28
medical camp

தூத்துக்குடி, ஜன.6:

சிவகளை, கீழசெக்காரக்குடியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படி, பண்ணைவிளை கால்நடை மருத்துவமனை சார்பில் சிவகளையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராஜன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மருத்துவர் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ் தலைமை வகித்தார்.

உதவி மருத்துவர் தெய்வானை தலைமையிலான மருத்துவக்குழுவினர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களின் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாம் முடிவில், 196கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசியும், 689ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கமும், 10 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 17பசுக்களுக்கு மலடுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதுபோன்று, செய்துங்கநல்லூர் கால்நடை மருத்துவமனை சார்பில் அய்யனார்குளம்பட்டியில் நடைபெற்ற முகாமில், உதவி மருத்துவர் தெய்வானை தலைமையிலான மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் பரிசு வழங்கினார்.

முகாம் முடிவில், 197கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசியும், 697ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கமும், 10 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 17பசுக்களுக்கு மலடுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தெய்வச்செயல்புரம் கால்நடை மருத்துவமனை சார்பில் கீழசெக்காரக்குடியில் நடைபெற்ற முகாமில், உதவி மருத்துவர் ஆனந்தராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பஞ்சாயத்து தலைவி ராமலெட்சுமி பரிசு வழங்கினார்.

முகாம் முடிவில், 198கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசியும், 829ஆடு, மாடுகள் மற்றும் 125கோழிகளுக்கு குடற்புழு நீக்கமும், 10 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 13பசுக்களுக்கு மலடுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன், உதவி இயக்குநர் ஆண்டனி இக்னேஷியஸ்சுரேஷ், மருத்துவ உதவியாளர்கள், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here