பாதையாத்திரை பக்தர்களுக்கு ரிப்லெக்டர் ஸ்டிக்கர் வழங்க வேண்டும் – காவல்துறையிடம் கோரிக்கை

0
73
kovil news

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் தொடங்கி தை மாதம் வரை இந்து கோவில்களில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் பாதையாத்திரையாக செல்கிறார்கள். திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் என பல்வேறு கோவில்களுக்கு வெகுதூரங்களில் இருந்து நடந்தே செல்கிறார்கள். அதாவது இராமநாதபுரம், தேனி, விருந்துநகர்,மதுரை மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கேரளமாநிலம், கொங்கு மண்டலத்திலிருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்கிறார்கள். அதேபோல் தென் மாவட்டங்கள் பலவற்றிலிருந்தும் பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

விரதமிருந்து செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு கூட அணிந்து கொள்வதில்லை. பக்தர்கள் செல்வதற்காக பழனி அருகே சாலையின் ஓரத்தில் தனி வழி அமைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் பகதர்கள் தங்கி செல்வதற்கு சாலை ஓரங்களில் பல இடங்களில் தங்கும் இடம் அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் அது தற்போது தொடரவில்லை. இந்தநிலையில் சாலை ஓரமாக இரவு நேரத்தில் நடந்து செல்லும் பக்தர்கள் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

அதற்கு, அவர்கள் நடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே அவர்கள் ரிப்லெக்டர் என்று சொல்லும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கரை ஒட்டி சென்றால் வாகன ஓட்டிகளுக்கு தெரியும். அதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியும். இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்த்துறை பக்தர்களுக்கு ஸ்டிக்கர் வழங்கியதாக சொல்கிறார்கள். மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஸ்டிக்கர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆனால், அது புதுக்கோட்டை, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதியில் தொடரவில்லை. வெகுதூரத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம், டோல் கேட் விலக்கு, முத்தையாபுரம், புதுக்கோட்டை ஜங்சனில் நின்று ஓட்டிவிட வேண்டும். அடுத்த முறை வரும்போது பக்தர்களே தானாக முன்வந்து அதுபோன்ற ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாண்டு சாலை யோரத்தில் நடந்து சென்ற பக்தர்கள் விபத்தில் சிக்கியிருப்பது அதிகமாகவே தெரிகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இனிமேலாவது குறிப்பிட்ட பகுதி வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஸ்டிக்கர் வழங்கி விபத்துக்களை தவிர்க்க செய்ய வேண்டும் என்று பாதையாத்திரை பக்தர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here